Home கலை உலகம் “இரண்டு வருடங்களாக என்னிடம் உயிர் மட்டும் தான் இருந்தது” – சிம்பு உருக்கம்!

“இரண்டு வருடங்களாக என்னிடம் உயிர் மட்டும் தான் இருந்தது” – சிம்பு உருக்கம்!

600
0
SHARE
Ad

simbuசென்னை, மே 10 – “கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் உயிர் மட்டும் தான் மீதம் இருந்தது. இதுவரை வாழ்வில் அனுபவிக்காத அனைத்து கஷ்டங்களையும், இந்த இரண்டு வருடங்களில் அனுபவித்து விட்டேன்” என்று நடிகர் சிம்பு, இசை வெளியீட்டு விழா ஒன்றில் மிக உருக்கமாக பேசியுள்ளார்.

சந்தானத்தின் “இனிமே இப்படித்தான்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சிம்பு, கடந்த இரண்டு வருடங்களாக தனது படங்கள் வெளியாவதில் தொடரும் சிக்கல்கள் பற்றி கூறியதாவது:-

“கடந்த இரண்டு வருடங்களாக, எனது படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நான் தான் காரணம் என்று கூறுகின்றனர். சிறு வயது முதல் கஷ்டங்களை அறிந்திராத நான், கடந்த இரு வருடங்களாக எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன். காதலித்த பெண்ணும், என்னை விட்டுச் சென்றுவிட்டாள். படங்கள் இல்லாததால், பணமும் கிடைக்கவில்லை.”

#TamilSchoolmychoice

“என்னிடம் உயிர் மட்டும் தான் மீதம் இருந்ததாக நான் உணர்ந்தேன். அந்த சமயங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது எனது ரசிகர்கள் தான். அவர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். அஜித் அவர்கள் என்னைப் பற்றி எனது அப்பாவிடம் கூறிய வார்த்தைகளும் எனக்கு அறுதல் அளித்தது” என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு கடைசியாக நடித்து வெளியான படம், “போடா போடி”. அதன் பிறகு அவர் “வாலு”, “வேட்டை மன்னன்”, “இது நம்மாளு” போன்ற படங்களில் நடித்து இருந்தாலும், அந்த படங்களின் வெளியீடு பல்வேறு காரணங்களால் முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.