Home உலகம் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து – தலிபான்களின் காணொளி வெளியானது!

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து – தலிபான்களின் காணொளி வெளியானது!

543
0
SHARE
Ad

talibanஇஸ்லாமாபாத், மே 11 – பாகிஸ்தான் கில்கிட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பன்னாட்டு தூதர்கள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதர்களும், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் மனைவிகள் உட்பட 6 பேர் பலியாகினர்.

இயந்திரக் கோளாறுதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் இயக்கம், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றது. தாங்கள் தான் சிறிய ரக ஏவுகணை கொண்டு ஹெலிகாப்டரை தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை, பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், தலிபான்களின் வலைத்தளத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்துடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த காணொளியில், “நாங்கள் அந்த ஹெலிகாப்டரை வீழ்த்தியது பற்றி பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. கடவுள் என்ன நினைக்கின்றாரோ அதனை நாங்கள் செயல்படுத்துகின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும் அவர்கள், தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். சுமார் 3 கி.மீ தொலைவில் இருந்து ஹெலிகாப்டரை சுட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு இதுவரை எவ்வித மறுப்பு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் காணொளியைக் கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=kCXnPftH7Vk