Home இந்தியா சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றார் விஜயகாந்த்!

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றார் விஜயகாந்த்!

591
0
SHARE
Ad

captain-speechசென்னை, மே 11 – அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சென்னை சென்றுள்ளார்.

கடந்த ஜெயலலிதா தீர்ப்புக்கு முன்பு வரை விஜயகாந்த் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தார். அவரது உடல் நலம் காரணமாக அதிகமாக கட்சி பணியில் செயல்படாமல் இருந்து வந்தார். மறுபக்கம் அவரது கட்சி வேறு உடைந்து கொண்டு வந்தது.

இதனாலும் அவர் வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வரும் வரை அவர் புத்துணர்வோடு பேசி வந்தார். ஆனால் ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் அமைதியானார்.

#TamilSchoolmychoice

மகன் பட வேலைகளில் ஈடுபாடு காட்டினார். பல முக்கியப் பிரச்சனைகளிலும் கூட அவர் கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் விஜயகாந்த்.

அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சென்றனர். அவரது சிங்கப்பூர் பயணத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்துக்கு இடம் பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் விஜயகாந்த் சென்றிருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை அவர் சென்னை செல்வதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அவர் மனைவி, குடும்ப மருத்துவருடன் சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்று விட்டார். நாளை ஜெயலலிதா தீர்ப்பு வரவுள்ள நிலையில் முன்கூட்டியே விஜயகாந்த் சென்னை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.