Home நாடு அம்னோவின் ரைஹான் சுலைமான் காலமானார்!

அம்னோவின் ரைஹான் சுலைமான் காலமானார்!

513
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 11 – கடந்த அம்னோ தேர்தலில், அம்னோ மகளிர் பிரிவின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டவரான ரைஹான் சுலைமான் பாலஸ்தீன் (வயது 49) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

raihansulaiman

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக கடந்த புதன்கிழமை முதல் புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 1.15 மணியளவில் காலமானதாக அவரது மகன் முகமட் ருசைனி ரீஸ்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புத்ராஜெயாவிலுள்ள மஸ்ஜித் துவாங்கு மிஸான் சைனல் அபிடின் மசூதியில் அவரின் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, பின்னர் தானா பெர்குபுரான் இஸ்லாம் இடுகாட்டில் அவர் நல்லுடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் முகமட் ருசைனி தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு அம்னோ தேர்தலில், டத்தோஸ்ரீ ஷாஹ்ரிசாட் அப்துல் ஜாலிலை எதிர்த்து ரைஹான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.