Home இந்தியா இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

596
0
SHARE
Ad

paneer_selvam_002சென்னை, மே 12 – சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதால் தற்போதை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

நேற்று தீர்ப்பு விவரம் வெளியான உடனேயே போயஸ் கார்டனுக்கு வந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

இதையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளதால், பன்னீர் செல்வம் இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா வரும் 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

எனவே, சட்டப்பேரவையில் உள்ள முதல்வரின் அறை உடனடியாக திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் துவங்கிவிட்டன என தமிழக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.