Home இந்தியா ஐ.பி.எல்-8 : பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி!

ஐ.பி.எல்-8 : பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி!

585
0
SHARE
Ad

hyderabad_6401ஐதராபாத், மே 12 – ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. பின்னர் 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியளில் கடைசி இடத்தில் உள்ளது.