நீதியையே மாற்றிப்போட்ட இந்த பிழை காரணமாகத் தான் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், கணக்குப்பிழை காரணமாக ஜெயலலிதாவின் வருவாய்க்கும், சொத்துக்களுக்கும் இடையிலான வேறுபாடு 2.82 கோடிதான் ஏற்பட்டுள்ளது. இது வருவாயை விட 10 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் வருமானத்தைவிட சொத்து மதிப்பு 76.75 சதவீதம் அதிகமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக நீதிபதி குமாரசாமி, நேற்று தனது உதவியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிகளை தடுப்பதற்காக தமிழக எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
திமுக தனது வழக்கறிஞர்கள் குழுவை பெங்களூருவிற்கு அனுப்பி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளது.
அதேபோல், பாமக-வும் தங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களை பெங்களூருவிற்கு அனுப்பி உள்ளது. அவர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து வழக்கு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
ஜெயலலிதா விடுதலை என்ற தீர்ப்பை கேட்டு உற்சாகத்தில் துள்ளிக் குதித்த அதிமுக-வினர் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சைகளால் சற்றே கலக்கத்தில் உள்ளனர்.