Home அவசியம் படிக்க வேண்டியவை மாஸ் விமானத்துக்கு அச்சுறுத்தல்: ஜெர்மன் வர்த்தகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

மாஸ் விமானத்துக்கு அச்சுறுத்தல்: ஜெர்மன் வர்த்தகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

383
0
SHARE
Ad

சிப்பாங், மே 14 – மாஸ் விமான பணியாளர்களுக்கு (crew) அச்சுறுத்தலாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் ஜெர்மனைச் சேர்ந்த ஆடவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கோலாலம்பூரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட டயட்மர் ரோஸ் (54 வயது) என்ற அந்நபர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணியாளர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளார்.

Boeing_777-200ER_Malaysia_AL_(MAS)_9M-MRO_-_MSN_28420_404_(9272090094)

#TamilSchoolmychoice

மேலும் விமான பணியாளர்களிடம் குரலை உயர்த்திப் பேசியதுடன், அவர்களை கடுமையாக ஏசியும் உள்ளார். இதுகுறித்து தலைமை விமானியிடம் விமானப் பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு 11.27 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு, நடுவானில் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்புவது என விமானி முடிவு செய்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் எம்எச் 179 என்ற அந்த விமானம் தரையிறங்கியதும், பணியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டயட்மர் ரோஸ் விமான நிலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து பாலியில் வசித்து வரும் வர்த்தகரான டயட்மர் ரோஸ் மீது 1996ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ், விமானத்திற்கும் அதில் இருந்த பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

நேற்று புதன்கிழமை, தன் மீதான குற்றச்சாட்டை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.