Home தொழில் நுட்பம் ஐதராபாத்தில் முதல் முறையாக ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்’ சேவை அறிமுகமாகிறது!

ஐதராபாத்தில் முதல் முறையாக ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்’ சேவை அறிமுகமாகிறது!

543
0
SHARE
Ad

google_streetஐதராபாத், மே 15 – பெரு நகரங்களுக்கான பயணத்தில் பயணிகளுக்கு வானுயர் கட்டிடங்கள், சுற்றுலாப் பகுதிகள், முக்கிய இடங்கள் போன்றவற்றின் முகவரிகள்,  விவரங்கள்,  குறிப்புகளை படங்களுடன் அறிந்து கொள்ள உதவும் கூகுளின் மிக முக்கிய சேவைதான் ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்’ (Google Street View). இந்த சேவை இந்தியாவில் முதன் முதலாக ஐதராபாத் நகரில் அறிமுகமாக உள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் கூறுகையில், “கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் சேவை இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத் நகரில் அறிமுகமாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரின் பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் சேவையின் முக்கிய அதிகாரிகளான மாணிக் குப்தா மற்றும் நாராயண டுமலா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களுக்கும் கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் சேவை பயன்பாட்டில் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்துவரை அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை மேம்படுத்தப்படவில்லை. இதுவரை இந்தியாவின் தாஜ்மஹால், குதுப் மினார் போன்ற முக்கிய இடங்களுக்கு மட்டும் தான் இந்த சேவையை மேம்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்தது.

எனினும், ஒரு நகரம் முழுவதற்குமான இந்த சேவை இதுவரை மேம்படுத்தப்படவில்லை. இதற்காக கூகுள் குழு இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் இதற்கு முன்பு இந்திய நகரங்களுக்கு கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் சேவையை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.