Home நாடு எம்எச்370: கப்பலின் பாகம் கிடைத்தது புதிய நம்பிக்கை அளிக்கிறது – லியாவ்

எம்எச்370: கப்பலின் பாகம் கிடைத்தது புதிய நம்பிக்கை அளிக்கிறது – லியாவ்

520
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-2கோலாலம்பூர், மே 14 – எம்எச்370 விமானத்தை தேடும் பணியின் போது 19ஆம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்தத் தேடுதல் நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல் ஆழ்கடலில் மூழ்கியுள்ள
எத்தகைய பொருளையும் நிச்சயமாக கண்டுபிடித்துவிடும் என்பது இதன் மூலம்
உறுதியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“எம்எச்370 தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஃபர்கோ இக்வேட்டர்
(Furgo Equator) நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது. கடலுக்கடியில் சுமார்
6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் பொருட்களையும் கூட
அதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்,” என்றார் லியோவ்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இக்கப்பலுக்கு விமானங்களிலிருந்து வெளிப்படக்கூடிய சோனார்
சமிக்ஞை குறிப்புகள் கிடைக்கப் பெற்றதாக ஆஸ்திரேலிய கூட்டு முகைமை
ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியப் பெருங்கடலில் சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில்
மூழ்கியிருந்த பழைய கப்பல் ஒன்றின் சிதைந்த பாகத்தை ஃபர்கோ இக்வேட்டர்
கண்டுபிடித்துள்ளது.

“இம்மாத இறுதிக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடுவதற்கான பரப்பளவு மேலும் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும்.முன்பே அறிவித்துள்ளபடி, தேடுதல் நடவடிக்கையை நாங்கள் நீட்டிப்போம். இந்தப் பணியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றன,”என்று லியோவ் மேலும் கூறினார்.