Home கலை உலகம் முருகதாஸ் இயக்கிய இந்தி படத்திற்கும் எதிர்ப்பு!

முருகதாஸ் இயக்கிய இந்தி படத்திற்கும் எதிர்ப்பு!

761
0
SHARE
Ad

murugadass2-600சென்னை, மே 15 – கடந்த வருடம் விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே வெளியாகி வெற்றி பெற்றது. வரிசையாக பல வெற்றி படங்களை தந்துள்ள முருகதாசுக்கு

தற்போது ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘ரமணா’ படம் தற்போது இந்தியில் ‘கப்பார் ஸ் பேக்’ (Gabbar is back) என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இந்த படத்திற்கும் முருகதாஸ் தான் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தில், அக்ஷய் குமார், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இப்போது பிரச்சனை இறந்த பிணத்திற்கு சிகிச்சை அளிப்பது போல இந்த படத்தில் வரும் காட்சி – மருத்துவ துறையை இழிவுபடுத்துவதாக கூறி அகில இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த காட்சியை உடனே நீக்கவேண்டும், இல்லையென்றால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆணையத் தணிக்கைக் குழுவினருக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் பெரிய விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.