Home அவசியம் படிக்க வேண்டியவை இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!

இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!

542
0
SHARE
Ad

20121121Kontingen-Garuda-UNIFIL-211112-HO-1

ஜகார்தா, மே 15 – இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும் நல்ல நடத்தையற்றவர்களால் ராணுவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்று தெரிவித்துள்ள இந்தோனேசிய ராணுவம், அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இத்தகைய பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.

இந்நிலையில் அனைத்துலக மனித உரிமை சட்டத்தின்படி, இவ்வாறு பரிசோதனை நடத்துவது தவறு என்றும் இந்த நடவடிக்கையை இந்தோனேசிய ராணுவம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் என்ற குழு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கையானது பாலியல் ரீதியான வன்முறை என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக இந்தோனேசிய ராணுவம் பின்பற்றும் முறை அறிவியல் அடிப்படையற்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிலரை பேட்டி கண்டுள்ள இந்த அமைப்பு, இந்த பரிசோதனை மிகவும் வலி மிகுந்ததாகவும், மன உளைச்சல் தருவதாகவும் இருந்தது என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஒழுக்கமற்ற பெண்கள் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க இத்தகைய பரிசோதனை அவசியம் என இந்தோனேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபட் பஸ்யா தெரிவித்துள்ளார்.