Home நாடு மாடத்தில் உடலுறவு: அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தம்பதியர் மீது வழக்கு!

மாடத்தில் உடலுறவு: அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தம்பதியர் மீது வழக்கு!

645
0
SHARE
Ad

balcony1305கோலாலம்பூர், மே 15 – அடுக்குமாடி குடியிருப்பின் மாடத்தில் (பால்கனி) உடலுறவில் ஈடுபட்ட தம்பதியர் மீது ஒழுங்கீனமாக (அநாகரிகமாக) நடந்து கொண்டதாக குற்றம்
சாட்டப்படலாம் என குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டப்பிரிவு 377டி என்ற பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என வழக்கறிஞரான ஸ்ரீகாந்த் பிள்ளை கூறினார்.

பொது இடத்திலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ, ஒருவர் மற்றொரு நபருடன்
அநாகரிகமான செயலில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என
இச்சட்டப்பிரிவு கூறுகிறது.

#TamilSchoolmychoice

“அத்தம்பதியரின் அநாகரிக செயல் காணொளியாக படமாக்கப்பட்டு வேகமாக பரவி
வருகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயம்,” என்றார் ஸ்ரீகாந்த் பிள்ளை.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள
காவல்துறையினர், உரிய ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு வழக்கறிஞர் இது குறித்து
கருத்து தெரிவிக்கையில், அந்த தம்பதியர் வெளிப்படையாக இத்தகைய செயலில்
ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய முகாந்திரம்
உள்ளது என்றார்.

“படுக்கையறைக்குள் இவ்வாறு நிகழ்ந்திருந்தால் அது வேறு கதையாக
இருந்திருக்கும். ஆனால் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் வீட்டின்
மாடத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் அந்த வழக்கறிஞர்.

இதற்கிடையே இந்த அநாகரிக செயலை படம்பிடித்த நபர், ஆபாச காணொளியை
வைத்திருந்ததன் பேரில் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என காவல்துறை
தெரிவித்துள்ளது.