Home இந்தியா ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

715
0
SHARE
Ad

மொஹாலி, மே  17 – பெப்சி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Chennai Super Kings Logo with Dhoniஏற்கனவே, இரண்டு முறை ஐபிஎல் போட்டிகளில் வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள சென்னை அணி, இந்த முறையும் ஐபிஎல் போட்டிகளின் இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடுமா என்ற ஆர்வம் இதனால் எழுந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில், முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

பின்னர் விளையாடிய சென்னை அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது சென்னை அணி பெற்ற 9–வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவு சென்னை அணியின் முதல் இடத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியை சந்திக்கின்றது.

இரண்டாவது ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.