Home நாடு “நான் பதவி விலகவில்லை” – பண்டிகார் அமின் மூலியா

“நான் பதவி விலகவில்லை” – பண்டிகார் அமின் மூலியா

513
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 17 – நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா (படம்) பதவி விலகிவிட்டதாக துன் மகாதீர் அறிவித்த சில மணி நேரங்களில் அந்த செய்தியில் உண்மையில்லை என பண்டிகார் மறுத்துள்ளார்.

நேற்று பின்னிரவில் வெளியிட்ட அறிக்கையொன்றில் நாடாளுமன்ற சபாநாயகர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்யவில்லை” என பண்டிகார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Pandikar-Amin Speakerநாளை கூடவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டு தனது பணியைத் தொடரப் போவதாகவும் பண்டிகார் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதிவரை நீடிக்கும்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத் தொடரில் இடைத் தேர்தல்களின் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்தையும் பண்டிகார் நடத்தி வைப்பார்.

நேற்று பத்திரிக்கையாளர்களையும், பொதுமக்களையும் தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்த மகாதீர், பண்டிகார் தன்னை அண்மையில் சந்தித்ததாகவும், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இனிமேல் துணை சபாநாயகர்தான் நாடாளுமன்ற கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என்றும் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.