Home அவசியம் படிக்க வேண்டியவை 16 ஆண்டுகள் தடை நீக்கம்: மலேசிய பன்றி இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி!

16 ஆண்டுகள் தடை நீக்கம்: மலேசிய பன்றி இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி!

760
0
SHARE
Ad

சிங்கப்பூர், மே 18 – 16 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை நாடான மலேசியாவில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.

environmental-impact-disposal-waste-large-scale-pig-production

விவசாய உணவுகள் மற்றும் கால்நடை ஆணையம் (The Agri-Food & Veterinary Authority) அண்மையில் கிழக்கு மலேசியாவிலுள்ள விலங்குகள் மற்றும் கால்நடைகளால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்திய பின், சரவாக் இறைச்சி கூடத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிக்கு அனுமதி வழங்கியது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சரவாக்கில் இருந்து 9 டன் பன்றி இறைச்சி சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து உயிரோடு பன்றிகளையும், பச்சையாக பன்றி இறைச்சிகளையும் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ய கடந்த 1999-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. காரணம் அப்போது பன்றி இறைச்சி மூலமாக நீபா என்ற கிருமி பரவியது.

இந்த நீபா கிருமியால் மலேசியாவில் அந்த சமயத்தில் 100 விவசாயிகள் மற்றும் பல தொழிலாளர்கள் இறந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்தும் சிங்கப்பூருக்கு பன்றி இறைச்சிகள் இறக்குமதியாகத் தொடங்கியுள்ளன.