Home இந்தியா விதியை மீறி அனுஷ்கா சர்மாவை சந்தித்த விராட் கோலி சர்ச்சையில் சிக்கினார்!

விதியை மீறி அனுஷ்கா சர்மாவை சந்தித்த விராட் கோலி சர்ச்சையில் சிக்கினார்!

753
0
SHARE
Ad

kohli- anushka (1)பெங்களூரு, மே 18 – பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டி முடியும் முன்பே, மைதானத்தில் அமர்ந்திருந்த தனது காதலி அனுஷ்காவை, விராட் கோலி சந்தித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணியும் – டெல்லி அணியும் மோதியது. முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, கெய்ல் ஆகியோர் களம் கண்டனர் 1.1 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

#TamilSchoolmychoice

அப்போது விராட்கோலி 2 பந்துகளில் ஒரு ரன்னுடனும், கெய்ல் 5 பந்துகளில் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பலமாக பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து

கோலி,  இரசிகர்களுடன் அமர்ந்து இருந்த தனது காதலி அனுஷ்கா சர்மாவை  சந்தித்துள்ளார்.  அப்போது, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் அருகில் இருந்துள்ளனர். போட்டி முடியும் வரை வீரர்கள்  தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து சென்று வேறு ஒருவரை சந்திக்கக் கூடாது.

kohli- anushka 1ஆனால் விராட் கோலி,  அனுஷ்காவை போட்டியை பார்க்க வந்து இருந்த ரசிகர்கள் இருந்த பகுதியில் சென்று பார்த்துள்ளார். இது மைதானத்தில் இருந்த திரையிலும் ஒளிபரப்பானது.

இது ஊழல் தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய செயலாகும் என  ஊழல் மற்றும் பாதுகாப்பு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மழையால் ஆட்டம் முடிவுக்கு வந்து இருந்தால் பரவாயில்லை.

முடிவு அறிவிக்கபடுவதற்கு முன்பாகவே ஒரு அணியின் எதிர்கால கேப்டன் இவ்வாறு செய்தது அழகல்ல என அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

அவர் அணியின் கேப்டன். அதனால் விதிமுறைகள் அவருக்கு தெரியும். போட்டியின் போது யாரும் வீரர்களை சந்திக்க அனுமதி இல்லை.

மற்றும் வீரர்கள் தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து செல்ல அனுமதியும் இல்லை. இந்த பிரச்சனை கண்டிப்பாக பிசிசிஐக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.