Home இந்தியா அல்தான்துயா வழக்கு: இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? – நஜிப் பதிலடி

அல்தான்துயா வழக்கு: இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? – நஜிப் பதிலடி

763
0
SHARE
Ad

NAJIB6கோலாலம்பூர், மே 18 – கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அல்தான் துயா கொலை வழக்கு குறித்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? என துன் மகாதீருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்.

அண்மைய காலமாக பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என துன் மகாதீர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தன்னுடன் நேரடியாக விவாதம் நடத்த தயாரா? என்றும் நஜிப்புக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது இணையதளம் வழி மகாதீர் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் நஜிப்.

#TamilSchoolmychoice

“பல்வேறு தொடர்புகளை வைத்துள்ள, செல்வாக்கு மிக்க தனி நபர்கள் சிலர், அல்தான் துயா கொலை வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து அதில் என்னை தொடர்பு படுத்துகிறார்கள். அந்த வழக்கில் எனக்கு தொடர்புள்ளது என்று அவர்கள் நம்புவார்கள் என்றால், 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரத்தை அவர்கள் ஏன் எழுப்பவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நஜிப்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் நீதி விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதன் பிறகும் அரசு மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோருவது நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.

“இந்த வழக்கில் எனக்கு தொடர்பில்லை. எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. இந்த  கொலையில் தொடர்புடைய குற்றவாளி யார் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதோடு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

“நீதிமன்றத்தின் மிக விரிவான தீர்ப்புக்கு பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை முன் வைக்க உரிய அவகாசம் அளிக்கப்பட்ட பிறகும், நான் தொடர்ந்து பல மறுப்புகளை வெளியிட்ட பிறகும், சில தனிநபர்கள் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதுடன் என்னை அதனுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கிறார்கள்,” என்று நஜிப் மேலும் தெரிவித்துள்ளார்.