Home இந்தியா ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

684
0
SHARE
Ad

madinat-jumeirah-theatre-heroசென்னை, மே 18 – ஜெயலலிதா முதல்வராக  இருந்த போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இதே போல் அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவையும் மக்களுக்காக மலிவு விலையில் வழங்குப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மேலும் பல திட்டங்கள் அம்மா பெயரில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

அந்த வரிசையில் சென்னையில் அம்மா திரையரங்குகள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதற்காக தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இதே போல் கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களிலும் அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 7 இடங்களில் கட்டப்பட உள்ள அம்மா திரையரங்குகளுக்கு அரசின் அனுமதி வேண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திரையரங்குகள் கட்டும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளீர்சாதன வசதியுடன் கட்டப்படும் அம்மா திரையரங்குகளில் அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்ற திரையரங்குகளை விட 25 சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளதால் ‘அம்மா’ திரையரங்குகள் விரைவில் கட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதே போல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பின்புறம் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்பு கட்டிடம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது.

1 லட்சத்து 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் சுமார் ரூ. 33 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஒரு கலையரங்கம், கலந்தாய்வு கூடம் உள்ளிட்ட ஏராளமான அலுவலங்கள் உள்ளன. கட்டிட பணி முடிந்து தற்போது மேஜை, நாற்காலிகள் போடும் பணி நடந்து வருகிறது.

இந்த கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ‘அம்மா’ மாளிகை என்று பெயர் சூட்டி விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. அம்மா மாளிகை திறப்பதற்கான நிர்வாக ஒப்புதலுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவி ஏற்ற ஓரிரு நாளில் அவரது கையால் அம்மா மாளிகை மற்றும் அம்மா திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.