சென்னை,மே19 – திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார்.
தான் கலந்து கொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த தகவல்களை உடனுக்குடன் தனது பக்கங்களில் பதிவு செய்வதோடு, அவ்வப்போது சில சுவாரஸ்யமான விசயங்களையும் தனது ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிலையில், இன்று தனது டிவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“நான் 92-வது வயதில் இந்த அரங்கத்திலே உங்களையெல்லாம் சந்திக்கிறேன். இன்றும் ஆறேழு அகவைகள் – அல்லது அதிகமானால் எட்டு ஆண்டுகள் –அப்போது எனக்கு நூறு வயது ஆகியிருக்கும்.அதாவது,நான் நூறு வயதிற்கும் மேல் வாழ்வேன்.”
“அந்த நூற்றாண்டு விழாவினை உங்களோடு நான் கொண்டாடுவேன். அப்படிக் கொண்டாடுகின்ற நேரத்தில் என்னுடைய உடலும் இந்த அளவுக்குத் தளர்ந்திருக்கும். அப்போதும் தளர்ந்து தான் இருக்கும். இந்தத் தளர்ச்சியைப் போக்க எனக்கு உணர்ச்சியை வழங்க நான் உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்.” என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
இந்த நம்பிக்கையும் உற்சாகமும் தான் அவரைப் பல்லாண்டுகள் வாழ வைக்கிறது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.
தொகுப்பு:ஜோதிமுருகன்