Home இந்தியா ஐபிஎல்-8ன் இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல்-8ன் இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை!

588
0
SHARE
Ad

ipl-8மும்பை, மே 19 – ஐ.பி.எல்.8-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டம் முடிந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

‘பிளேஆப்’ எனும் காலிறுதிச் சுற்று இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் மலேசிய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி 2–வது தகுதி சுற்றில் விளையாடும். சென்னை அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர் மேக்குல்லம் இல்லாதது மிகப்பெரிய பாதிப்பாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாட இருப்பதால் அவர் தகுதிச் சுற்றில் ஆடவில்லை. மேக்குல்லம் 436 ரன்கள் எடுத்துள்ளார்.

அவர் இடத்தில் மைக்ஹஸ்சி விளையாடுகிறார். சுமித்துடன் இணைந்து அவர் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது. ரெய்னா, கேப்டன் டோனி, டுபெலிசிஸ், பிராவோ, அஸ்வின், ஜடேஜா போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.

மும்பையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சென்னைக்கு சவாலானது. ஏற்கனவே இந்த தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பையை வீழ்த்தி இருந்ததால் சூப்பர் கிங்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் தற்போது சிறந்த நிலையில் உள்ளது.

அந்த அணியில் கேப்டன் ரோகித்சர்மா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதிராயுடு, போலார்ட், பார்த்தீவ்பட்டேல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, மேக்லகன், ஹர்பஜன்சிங், சுஜித் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய முதல் தகுதி சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.