சால்கர், மே 19 –திடீரெனப் பெய்த கடும் மழையினால்,தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா சால்கர் நகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 31 வீடுகளுக்கும் மேலாக மண்ணில் புதையுண்டதால் 58 பேர் பலியாகினர்.நேற்று அதிகாலை 3 மணியளவில் திடுமென இந்நிலச்சரிவு ஏற்பட்டதால்,தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தப்பிக்க வழியில்லாமல் மண்ணில் புதைந்து போக நேரிட்டது எனத் தெரியவருகிறது.தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் விரைந்து வந்து நிலச்சரிவில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இந்நிலச்சரிவினால் 58 பேர் பலியானதாகவும்,37 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் ,மேலும் பலரைக் காணவில்லை என்றும் அஞ்சப்படுகிறது.கொலம்பியா அதிபர் ஜீயான்மானுவல் சாண்டோஸ் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.