Home நாடு நாடாளுமன்ற விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் – பண்டிகார்

நாடாளுமன்ற விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் – பண்டிகார்

516
0
SHARE
Ad

Pandikar Aminகோலாலம்பூர், மே 19 – நாடாளுமன்ற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் பிரதமர் துறையைச் சேர்ந்த அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சுதந்திரத்தின் மீது தவறான கண்ணோட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அதன் செயல்பாடுகளில் ஏற்படும் குழப்பங்களைப் போக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பண்டிகார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பண்டிகார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபாநாயகரும், நாடாளுமன்றமும் அரசாங்கத்தின் கைப்பாவையாக இருந்து செயல்படுகின்றது என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே நாடாளுமன்றத்தை கவனித்துக் கொள்ளும் பிரதமர் துறையின் அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தின் நிர்வாகம் குறித்து பிரதமர் நஜிப்பிடம் தான் வெளிப்படுத்திய அதிருப்திகளில் இதுவும் ஒன்று என்றும் பண்டிகார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் அந்த குறிப்பிட்ட அமைச்சர் பதவியை தற்போது டத்தோஸ்ரீ ஷாஹிடன் காசிம் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.