Home உலகம் தலையை வெட்ட ஆள் தேடும் சவுதி அரேபியா!

தலையை வெட்ட ஆள் தேடும் சவுதி அரேபியா!

565
0
SHARE
Ad

saudiரியாத், மே 19 -சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிகரித்ததை அடுத்து, பொது இடத்தில் வைத்து அதனை நிறைவேற்ற ஆள்வேண்டும் என்று அந்நாட்டு அரசு விளம்பரம் செய்து உள்ளது.

உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியா 5-வது இடம் பிடித்துஉள்ளது. இத்தகையை கொடூரமான பணியினைச் செய்ய,  “மரண தண்டனையை நிறைவேற்ற எட்டுஆட்கள் தேவை” என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான சம்பளம் மற்றும் எந்த ஒரு சிறப்புத் தகுதிகளும் தேவைப்படாத இந்த வேலை கொஞ்சமும் எண்ணிப்பார்க்க முடியாத விநோதனமான வேலையாகும்.

#TamilSchoolmychoice

மரண தண்டனை நிறைவேற்றுவதில் கடந்த 2014ம் ஆண்டில் சீனா மற்றும் ஈரானைத் தொடர்ந்து சவுதி அரேபியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு மட்டும் சவுதி அரேபியாவில் மொத்தம்  85 பேர்கள் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சவுதி அரேபியா செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலானோர் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் பாதிப் பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஜோர்டான், இந்தியா, இந்தோனேஷியா, பர்மா, ஷாட், பிலிப்பைன்ஸ் மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மரண தண்டனை ஏன் அதிகரித்தது என்பதற்குச் சவுதி அரேபியா அதிகாரிகள்  எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ,சவூதி அரேபியா இப்படியோர் அறிவிப்பினை வெளியிட்டிருப்பது மிகவும் விநோதமான செய்தியாகும்.