உள் நாட்டு போர் உச்சகட்டம் அடைந்ததை தொடர்ந்து அதிபர் ஹாதி சவுதிஅரேபியா தப்பி சென்று தஞ்சம் அடைந்தார். அதிபர் ஹாதிக்கு ஆதரவாக சவுதிஅரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் தலையிட்டு கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் இத்தாக்குதல்கள் நடந்து வருகிறது. தற்போது ஐ.நா. தலையீட்டின் போரில் 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உள் நாட்டு போர் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் 1850 பேர் பலியாகி உள்ளனர்.
7,349 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 5 லட்சம் பேர் ஏமனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐ.நா.சபை தகவல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.