Home இந்தியா சுனந்தா கொலை வழக்கு: செய்தியாளர்கள் மீது சசிதரூர் பாய்ச்சல்!

சுனந்தா கொலை வழக்கு: செய்தியாளர்கள் மீது சசிதரூர் பாய்ச்சல்!

814
0
SHARE
Ad

pngபுதுடெல்லி, மே 21 – சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சந்தேகத்துக்குரிய 3 பேரிடம் உண்மையறியும் சோதனை நடத்த டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. சுனந்தாவின் கணவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசிதரூரின் வீட்டு வேலைக்காரர் நரேன் சிங்,

கார் ஓட்டுநர் பஜ்ரங்கி, குடும்ப நண்பர் சஞ்சய் தேவன் ஆகிய மூவரும், உண்மையறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாக கூறியதையடுத்து, மேற்கண்ட அனுமதியை டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா வழங்கினார்.

இது குறித்து சசிதரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிதரூர், “பத்திரிகையாளர்கள் என்றாலே சுயமாக நியமிக்கப்பட்ட பொய்யர்கள், அவர்களுக்கு பதில் அளிக்க போவதில்லை, போலீசாரிடம் மட்டுமே கூறுவேன்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

டெல்லியில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றின் அறையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆஆம் தேதி சுனந்தா புஷ்கர் (51), மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக விசாரித்து வரும் டெல்லி போலீசார்,

அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், சசிதரூரிடம் 3 முறை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.