Home கலை உலகம் தனுஷின் ‘மாரி’ பட முன்னோட்டம் வெளியீடு!

தனுஷின் ‘மாரி’ பட முன்னோட்டம் வெளியீடு!

579
0
SHARE
Ad

maariசென்னை, மே 21 – ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கி வரும் புதுப் படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்கிறார்.

இப்படத்தின் முதல் புகைப்படம் ஏற்கனவே வெளியானது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் இடம் பெற்றிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இப்படத்தின் முதல் முன்னோட்டம் நேற்று வெளியாகியுள்ளது. வெளியாகி சிரிது நேரத்தில் 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போது வரை இந்த முன்னோட்டத்தை 2,37,700 மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாரி’ படத்தின் முன்னோட்டம்: