நியூயார்க், மே 21 – ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் கணிப்பு அமைப்பு‘ சார்பில் தெற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெற்கு ஆசியாவில் 2015 மற்றும் 2016–ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டில்(2015) இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், இது 2016–ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதே நேரம் சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி இந்த ஆண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும் எனவும் அடுத்த ஆண்டு இது 6.8 சதவீதமாக சரியும் என்றும் அந்த ஆய்வறிக்கை கணித்து இருக்கிறது.
தெற்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா உள்நாட்டு நுகர்வை அதிகரித்தல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதால்,
தெற்கு ஆசியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 2015–ஆம் ஆண்டு 6.7 சதவீதமாகவும், 2016–ஆம் ஆண்டு இது 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனவும் ஐ.நா.வின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.