ஏறத்தாழ 5 முக்கிய படங்கள் அந்தத் தேதியில் திரையீடு காணும் என்ற காரணம்தான் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்குக் காரணம். அந்தப் படங்களில் ஒன்று மாரி -2.
தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மாரி படம், சில அம்சங்களில் இரசிகர்களைக் கவர்ந்தாலும், வசூல் ரீதியாகப் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் மாரி பட இயக்குநர் பாலாஜி மோகன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அதன் இரண்டாம் பாகத்தை அவர் வசம் ஒப்படைத்திருக்கிறார் தனுஷ்.
டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி அனைத்து படங்களும் அறிவிக்கப்பட்டபடி அதே தேதியில் வெளியாகுமா அல்லது சில படங்கள் பின்வாங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாரி-2 படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரையில் 13.7 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் ஈர்த்திருக்கிறது.
அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: