Home இந்தியா ஜெயலலிதா முதல்வராவதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கு தள்ளுபடி

ஜெயலலிதா முதல்வராவதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கு தள்ளுபடி

512
0
SHARE
Ad

பெங்களூர், மே 22 : ஜெயலலிதா விடுதலையானாலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. நாளை ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என தமிழகம் காத்திருக்கும் இந்த வேளையில், நேற்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவர் முதல்வராகக் கூடாது எனத் தடை கோரும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

jayalalithaa3இந்த பொதுநல வழக்கைத் தொடுத்த நபருக்கு அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை நிரபராதி என்று அறிவித்து கடந்த மே 11ஆம் தேதி விடுதலை செய்துவிட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்ணி என்ற வழக்கறிஞர, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கேட்டுக்கொண்டார். ஆனால், இதை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட மனு எனக்கூறி தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.