Home உலகம் மே இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுகிறது டோஷிபா!

மே இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுகிறது டோஷிபா!

426
0
SHARE
Ad

Toshibaசிங்கப்பூர், மே 21 –  புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனமான ‘டோஷிபா’ (Toshiba) இம்மாத இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீனாவின் சின் மின் என்ற தினசரி ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டோஷிபா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம், தங்கள் நிறுவனத்தின் வெளியேற்றம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், உள்ளூர் சந்தையில் சில தயாரிப்புகளை திரும்ப பெறவும் முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து டோஷிபா நிறுவனம் கூறுகையில், “சிங்கப்பூரில் கடுமையான தொழிற்போட்டியின் காரணமாக எங்கள் நிறுவனத்தின் இடத்தை  தக்க வைத்துக் கொள்வது கடினமாகிறது. இதன் காரணமாகவே சற்றே கடுமையான முடிவுகளை எடுக்க நேர்ந்ததுள்ளது” என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தைகளில் தொலைக்காட்சிகள் மற்றும் சில வீட்டு உபயோகப்பொருட்களை சில்லறை வணிகர்களிடமிருந்து திரும்பப் பெற்று இருப்பதையும் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

சில்லறை வர்த்தகர்கள் சிலர் டோஷிபாவின் வெளியேற்றம் குறித்து கவலை தெரிவித்து இருந்தாலும், தென் கோரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தான் டோஷிபா வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதே நிலை தொடர்ந்தால், டோஷிபாவின் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.