Home இந்தியா அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு!

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு!

459
0
SHARE
Ad

Jayalalitha_20130608சென்னை, மே 22 – சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 7.02 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்பட 144 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து 10 நிமிடத்தில் கூட்டம் நிறைவடைந்து.

#TamilSchoolmychoice

இதன் பின்னர் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக போயஸ் கார்டனுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதா மீண்டும் முதல்வராவது குறித்து விவாதிக்க உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.