Home உலகம் உலகில் தலைசிறந்த தங்கும் விடுதியாகத் துபாய் ‘புர்ஜ் அல் அரப்’ விடுதி தேர்வு!

உலகில் தலைசிறந்த தங்கும் விடுதியாகத் துபாய் ‘புர்ஜ் அல் அரப்’ விடுதி தேர்வு!

678
0
SHARE
Ad

jumeirah-beach-property-for-new-luxury-hotelதுபாய், மே 22 – உலக அளவில் தலைசிறந்த தங்கும் விடுதியாகத் துபாயின் ‘புர்ஜ் அல் அரப்’  தங்கும் விடுதி தொடர்ந்து மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ‘டெய்லி டெலிகிராப்’ நாளிதழ் வாசகர்கள் மத்தியில் 20 அளவுகோல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத்  தேர்வு நடைபெற்றது.

லண்டனில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருது அந்தத்  தங்கும் விடுதி நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது. 650 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத்  தங்கும் விடுதி 1999-ல் திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஆடம்பர விடுதி, 322 மீட்டர் (1056 அடி) உயரமுள்ள கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இந்த விடுதி நிலப்பகுதியுடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.

burj al arabஉலகின் மிகவும் சிறந்த சொகுசு விடுதி என்ற பட்டத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தக்கவைத்துள்ள ‘புர்ஜ் அல் அரப்’ விடுதி, மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விடுதி என்ற இடத்தையும் தொடர்ந்து ஒன்பதாவது முறையாகப் பெற்றுள்ளது.

இந்தத் தங்கும் விடுதி உலகின் ஒரே ஏழு நட்சத்திர விடுதி எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் இரவு தங்குவதற்குக் குறைந்தபட்ச வாடகை ரிங்கிட் 4,500 மேலாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த விடுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடில் டென்னிஸ்’ விளையாட்டுப்த் போட்டி நடத்தப்பட்டு உலகின் உயரமான இடத்தில் நடத்தப்பட்ட டென்னிஸ் போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.