Home உலகம் சிறிசேனா அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா!

சிறிசேனா அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா!

500
0
SHARE
Ad

cabinet-878789dகொழும்பு, மே 22 – இலங்கை அதிபர் சிறிசேனா அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா செய்திருப்பது, அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான அமைச்சரவையில், பிரதமர் ரணில் விக்ரம சிங்கே உட்பட மொத்தம் 40  அமைச்சர்கள் உள்ளனர்.

அங்கு, அதிபருக்கு அதிகபட்ச அதிகாரம் இருந்தபோதிலும், பல்வேறு விவகாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தலையிடுவதாகப் புகார்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக, 19-வது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு, முயற்சிகள் நடந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இதனை நிறைவேற்றினால், அதிபர் வசம் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்குக் கணிசமான அளவில் அதிகாரங்கள் வழங்கப்படும்.

இந்த நிலையில், சிறிசேனா அமைச்சரவையில் இருந்து மகிந்த அபேவர்த்தனே (நாடாளுமன்ற விவகாரம்), திலன் பெரேரா (வீட்டு வசதி), சிபி ரத்தன் நாயகே (பொது நிர்வாகம்), பவித்ரா தேவி (சுற்றுச் சூழல்) ஆகிய 4 பேர், நேற்று அதிரடியாகத்  தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமாவுக்குப் பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சியும், அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் தலையிடுகிறது.”

“கூட்டணி ஆட்சி நடைபெற்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. அதிபர் சிறிசேனவுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. எனவே, செயல்படாத, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசில், நாங்கள் அங்கம் வகிக்க விரும்பவில்லை.” என்றனர்.

இவர்கள் அனைவரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின், இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ராஜபக்சே தனது அதிரடி அரசியலைத்  தொடங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.