Home நாடு நட்பு ஊடகங்களில் பரவிய நிழற்படம் – வாடிக்கையாளர் ரசீதில் ஆபாசச் சொற்கள்!

நட்பு ஊடகங்களில் பரவிய நிழற்படம் – வாடிக்கையாளர் ரசீதில் ஆபாசச் சொற்கள்!

608
0
SHARE
Ad

nandosresitபெட்டாலிங் ஜெயா,மே22- நட்பு ஊடகங்களில் பரவும் செய்திகளால் பல நல் விளைவுகளும் ஏற்படுகின்றன; பல பின் விளைவுகளும் ஏற்படுகின்றன.

நட்பு ஊடகங்களில் பரவிய செய்தியால் ஒரு பணியாளருக்கு ஏற்பட்ட பின் விளைவைப் பாருங்கள்:

சிட்டிமாலில் இயங்கி வரும் ஒரு துரித உணவகமான நண்டூஸின் ரசீது ஒன்றின் நிழற்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த ரசீதில்  ஹாக்கியன் மொழியில் பெண்ணுறுப்பைக் குறிக்கும் அபாசச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நண்டூஸ் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து,அவரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களிடம் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.அந்நிர்வாகம் இதுதொடர்பாகத் தமது முகநூலில் பதிவு செய்திருப்பதாவது:

“அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! இந்த விவகாரத்தை நாங்கள் கடுமையாகக் கருதி,சம்பந்தப்பட்ட பணியாளரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். உங்களது ஆதரவிற்கு நன்றி.இவ்விவகாரம் தொடர்பாக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறோம்”எனத் தெரிவித்துள்ளது.

ஒரு வாடிக்கையாளரின் ரசீதில் ஆபாசச் சொற்களைப் பதிவு செய்த பணியாளர் தண்டிக்கப்பட வேண்டியவரே!