Home நாடு கட்டமைப்புத் திட்டம் குறித்து இலங்கை அதிபருடன் உத்தாமா சாமிவேலு பேச்சு!

கட்டமைப்புத் திட்டம் குறித்து இலங்கை அதிபருடன் உத்தாமா சாமிவேலு பேச்சு!

605
0
SHARE
Ad

srisenaaகொழும்பு, மே 22 – இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் சாமிவேலு, இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் சிறிசேனாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் சாமிவேலு.

மே 19-ஆம் தேதி முதல் இலங்கைக்கு மூன்று நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு , இலங்கையில் கட்டமைப்பு நிர்மாணிப்பு அமலாக்கத்தில் மலேசியா கொண்டுள்ள ஆர்வம் குறித்து இலங்கை அதிபருடன்  விவாதித்தார்.

குறிப்பாகக்  கொழும்புவிற்கும் – கண்டிக்கும் இடையிலான நெடுஞ்சாலைத் திட்டம், கொழும்பு மோனோ இரயில் திட்டம் மற்றும் மலேசியா-இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே அரசாங்க ரீதியில் செய்த இலங்கை வான் போக்குவரத்து எரிபொருள் குழாய் பொருத்தும் திட்டம் ஆகியவை அந்தப் பேச்சு வார்த்தையில் இடம்பெற்றன.

#TamilSchoolmychoice

கொழும்பு மோனோ இரயில் திட்டம் மற்றும் இலங்கை வான் போக்குவரத்து எரிபொருள் குழாய் பொருத்தும் திட்டத்திற்கான பரிந்துரை ஆவணங்களையும் சிறிசேனாவிடம் சமர்ப்பித்தார் சாமிவேலு.

இலங்கையில், மலேசிய நிறுவனம்  முதலீடு செய்வது குறித்து இலங்கை அதிபர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், மலேசிய அரசாங்கம் கொண்டுள்ள புரிந்துணர்வு மீதான பணிகள் வெளிப்படையாக இருக்கும் எனவும் சிறிசேனா தெரிவித்ததாக உத்தாமா சாமிவேலு கூறினார்.