Home நாடு ரோஹின்யா மக்கள் பினாங்கில் தங்க வைக்கப்படலாம் – காலிட் தகவல்

ரோஹின்யா மக்கள் பினாங்கில் தங்க வைக்கப்படலாம் – காலிட் தகவல்

579
0
SHARE
Ad

Khalid Abu Bakarஈப்போ, மே 23 – ரோஹின்யா குடியேறிகளுக்கு தற்காலிக தங்குமிடங்கள் பினாங்கு உட்பட வடக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் என டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.

இது குறித்து இன்னும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்காத நிலையில், தேசிய பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தேசிய காவல்படைத் தலைவரான காலிட் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் இன்னும் ஆணையத்தின் முடிவிற்காகக் காத்திருக்கின்றோம். வடக்கு மாநிலங்கள் தான் அவர்களைத் தங்க வைக்க சரியான இடம் என்று எண்ணுகின்றேன். காரணம் அவர்களை எளிதில் இடம் மாற்றுவதற்கு அம்மாநிலங்கள் தான் வசதியாக இருக்கும்.”

#TamilSchoolmychoice

“பினாங்கு மாநிலத்தில் தற்காலிக இருப்பிடங்களை அமைக்க அரசாங்கம் எண்ணி வருகின்றது. அங்கு ரோஹின்யா மக்களைத் தங்க வைக்க எளிதாக இருக்கும்” என்றும் காலிட் கூறியுள்ளார்.

மேலும், “நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எந்த ஒரு சம்பவமும் நடந்துவிடக்கூடாது என்பதில் காவல்துறை மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றது. குடிநுழைவுத்துறையின் உதவியுடன் ரோஹின்யா மக்களின் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றோம். பாதுகாப்பு மிக அவசியம் என்பதால் ஒவ்வொருவரையும் மிக கவனமுடன் கண்காணித்து வருகின்றோம்” என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.