அத்துடன் ‘சிப்ஸ்‘ போன்ற உணவுகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும். அடிக்கடி விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புழம்புவதும் நேரிடும். உறக்கத்தில் கனவு காணும் போது, கருவிழிகள் அசையும்.
இரவு நேரத்தில் ‘சிப்ஸ்‘ போன்ற உணவுகளை சாப்பிட்டால் கருவிழி அசைவு குறைவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை.
இதில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்‘ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.
இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. நாள் முழுவதும் சாப்பிடும் உணவு கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.
இரவு நேரத்தில் ‘சிப்ஸ்‘ போன்ற உணவுகளை கொறிப்பதால் கொழுப்புச்சத்து அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது. ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக ‘சிப்ஸ்‘ போன்ற உணவுகளை கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும்.
ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.