அபுதாபி,மே 26- உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவி ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகைத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18 கேரட் தங்கத்தில் 400 கேரட் அளவிலான விலையுயர்ந்த வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மூன்று சிறந்த வடிவமைப்பாளர்கள்,இரண்டு தயாரிப்பு நிர்வாகிகள்,62 கைவினைஞர்கள் இணைந்து 700 நாட்கள் உழைத்து இதை உருவாக்கியுள்ளனர்.
இதன் விலை சுமார் 20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய்) ஆகும்.
ஹாங்காங் நகரில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்ட இந்தக் கிட்டார்,உலகின் விலையுயர்ந்த கிட்டார் என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.