Home இந்தியா “மோடி வெறும் ஊசிப்பட்டாசு தான்” – கொளுத்திப் போட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!

“மோடி வெறும் ஊசிப்பட்டாசு தான்” – கொளுத்திப் போட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!

619
0
SHARE
Ad

Narendra_Modiநியூ யார்க், மே 27 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு காணாத பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து கடந்த 25-ம் ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்த ஒரு வருட காலத்தை பொற்காலமாக கொண்டாடுவதாக பாரதிய ஜனதா கட்சி பிரகடனப்படுத்தினாலும், எதிர்பார்த்த அளவிற்கு மோடி செயல்படவில்லை என்றே பொதுமக்களின் பரவலான  பேச்சாக இருந்து வருகிறது.

ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் ஒட்டுமொத்த கறுப்புப் பணமும் மீட்கப்படும் என்பது போன்ற பிரதானப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கரைந்து போயின. எதிர்க்கட்சிகள் நரேந்திர மோடியை இந்தியாவில் பார்ப்பதே அரிதாகி வருகிறது என்றும், அவர் ‘என்.ஆர்.ஐ’ (NRI) போல் செயல்படுகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோடி பதவி ஏற்றபொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அமெரிக்க பத்திரிக்கைகளும் அவரின் இந்த ஒரு வருட ஆட்சி காலத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. இது தொடர்பாக பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை மோடியின் ஆட்சி குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில், “மோடி பதவி ஏற்றது முதல் பல சாதாரண திட்டங்களும் ஊதி பெரிதாக்கப்பட்டு,  பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல் காட்டப்படுகிறது. ஆனால், பெரும்பான்மையான திட்டங்களில் இந்தியா பின்னடைவைத் தான் சந்தித்துள்ளது.”

#TamilSchoolmychoice

“பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு, சிவப்பு நாடா முறை ஒழிப்பு போன்றவற்றை அவர் ஓரளவு ஒழித்தது வரவேற்கத்தக்கது என்றாலும், முன்னிலைப்படுத்தப்படும் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டம் வீண் விளம்பரமாகவே உள்ளது. தற்போதய நிலையில், மோடியின் வசந்தகாலம் முடிந்துவிட்டது. இனி  தான் சவால்கள் ஆரம்பமாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.