Home கலை உலகம் நடிகர் சாந்தனுவை காதலிப்பது பற்றி மனம்திறந்துள்ளார் தொகுப்பாளினி கீர்த்தி!

நடிகர் சாந்தனுவை காதலிப்பது பற்றி மனம்திறந்துள்ளார் தொகுப்பாளினி கீர்த்தி!

895
0
SHARE
Ad

keerthi_shanthanu001சென்னை, மே 28 – மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் கீர்த்தி.

இவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தும் அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இவரும் நடிகர் சாந்தனுவும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த நேரத்தில் இதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சாந்தனு அப்பாவும், இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இது பற்றி மனம்திறந்த தொகுப்பாளினி கீர்த்தி, சாந்தனு எனக்கு சிறு வயது நண்பன், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஏன் நாம் திருமணம் செய்யக்கூடாது என்று எண்ணி சமீபத்தில் தான் எங்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம்.

அவர்களும் சம்மதிக்க தற்போது திருமணத்தில் நிற்கிறது. எங்களுடைய திருமணத்தை பெற்றோர் அறிவிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் இது நாள் வரை பொறுமை காத்திருந்தோம் என்றார் கீர்த்தி.