Home கலை உலகம் ஆபாசத்தை ஊக்குவித்ததாக நடிகை சன்னி லியோன் மீது போலீசார் வழக்கு பதிவு!

ஆபாசத்தை ஊக்குவித்ததாக நடிகை சன்னி லியோன் மீது போலீசார் வழக்கு பதிவு!

818
0
SHARE
Ad

sunny_leone_002புதுடெல்லி, மே 29 – இந்தி நடிகை சன்னி லியோன், சினிமா பத்திரிகை ஒன்றில் ஆபாசமாக தோன்றியது பற்றி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விளக்கமளித்துள்ளார்.

சினிமா பத்திரிகை ஒன்றில் இடம்பெற்ற சன்னி லியோன் படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதிலுள்ள இணையத்தளத்தில் (link-ல்) சென்று பார்த்தால்,

ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் உள்ளதாக இந்து ஜனஜக்ரிதி சமிதி அமைப்பின் பெண் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளார். நடிகை சன்னி லியோன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த புகார், ‘தானே’ பேலீசாரின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. சன்னி லியோன் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று ஆஜராகியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் அவரைப் பார்க்கத் திரண்டதால், கூட்டத்தைக் கலைத்த போலீசார், சன்னி லியோனிடம் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ளனர்.