தனது கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி வசூல் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சரத்குமார் சமீபத்தில் திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அபோது அவர்கள், நடிகர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு சரத்குமார் பதில் அளிக்கையில், “பத்திரிக்கையாளர்கள் விஜயகாந்துடனான சந்திப்பின் போது தவறாமல் பாதுகாப்புக் கவசத்துடன் செல்ல வேண்டும். அப்போதுதான் பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி கூறுகையில், “விஜயகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளர் என்கிறார். அன்புமணி ராமதாஸ் நானே முதல்வர் என்கிறார். ஸ்டாலினும் தன்னை முதல் வேட்பாளராக பிரகடனப்படுத்திக் கொள்கிறார். முதலில் இவர்கள் எல்லாம் கூட்டுசேரட்டும். அதன் பின்பு ஆட்சி பிடிப்பதைப் பற்றி பேசுவோம்”என்று கூறியுள்ளார்.