இந்நிலையில், இன்று ரஜினி படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அவரை இயக்கப்போவது ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உட்பட முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் பணியாற்றியவர்கள் தான் என்றும் அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் நடைபெறப் போவதாகக் கூறப்படுகிறது.