Home கலை உலகம் இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் பாகுபலி படத்தின் முன்னோட்டம் வெளியானது!

இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் பாகுபலி படத்தின் முன்னோட்டம் வெளியானது!

780
0
SHARE
Ad

பாகுபலி1ஐதராபாத், ஜூன் 1 – ‘மஹதீரா’, ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்த ராஜமௌலியின் கனவுப் படமான பாகுபலியின் முன்னோட்டக் காட்சிகள் இன்று வெளியாயின.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பிரபாஸ், ராணா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா  மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சத்யராஜ், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் வரலாற்றுப் படமான பாகுபலி கடந்த மூன்று வருடங்களாக உருவாகி வருகிறது.

பிரம்மாண்டமான படக்காட்சிகள், மோஷன் பிக்சர் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் போன்ற காரணங்களால் தாமதாகி வந்த இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிப் படமாக வெளியாகவிருக்கும் இந்த படம், இந்திய சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பாகுபலி படத்தின் முன்னோட்டத்தை கீழே காண்க: