Home உலகம் உலகக் காற்பந்து சங்கத் தலைவராக செப் பிளேட்டர் ராஜினாமா! எஃப்.பி.ஐ. விசாரணை முடுக்கி விடப்பட்டது!

உலகக் காற்பந்து சங்கத் தலைவராக செப் பிளேட்டர் ராஜினாமா! எஃப்.பி.ஐ. விசாரணை முடுக்கி விடப்பட்டது!

642
0
SHARE
Ad

ஜூரிச், ஜூன் 3 – பிஃபா (FIFA) எனப்படும் உலகக் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கே நாட்களில் செப் பிளேட்டர் நேற்று தனது பதவியிலிருந்து விலகினார்.

அந்த காற்பந்து சங்கத்தின் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், கடந்த 17 வருடங்களாக தான் வகித்த பதவியை 79 வயதான பிளேட்டர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sepp Blatter

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ. (FBI) உலகக் காற்பந்து சங்கத்தின் மீதான ஊழல் விசாரணையைத் தொடக்கியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஊழல் விசாரணையை மேற்கொண்ட சுவிட்சர்லாந்து அதிகாரிகள், இதுவரை ஏழு காற்பந்து சங்க பொறுப்பாளர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த ஏழு பேரும், ஏனைய 8 சந்தேகப் பேர்வழிகளுடன் இணைந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

படம்: EPA