Home கலை உலகம் டுவிட்டரில் அதிக இரசிகர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார் அமிதாப் பச்சன்!

டுவிட்டரில் அதிக இரசிகர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார் அமிதாப் பச்சன்!

553
0
SHARE
Ad

amitabh-bhachchanபுதுடெல்லி, ஜூன் 3 – டுவிட்டரில் அதிக இரசிகர்களை (பாலோயர்களை) கொண்ட இந்திய பிரபலங்களில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தில் உள்ளார். இவரை ஒன்றரை  கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில், ஷாருக்கான் (1.34 கோடி), அமீர் கான் (1.29 கோடி), பிரதமர்  நரேந்திர மோடி (1.27 கோடி), சல்மான் கான் (1.22 கோடி) ஆகியோர் உள்ளனர். சச்சின் டெண்டுல்கரை 66 லட்சம்பேர் பின் தொடர்கிறார்கள்.

உலக அளவில், அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி 7 கோடி பேரை இரசிகர்களாக பெற்று முதலிடத்தில் உள்ளார். 2-ஆம் இடத்தில் இருப்பவர் பாப்  பாடகர் ஜஸ்டின் பைபர். இவரை 6.4 கோடி பேர் பின் தொடர்கின்றனர். 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 5.9 கோடி பேர்  இரசிகர்களாக உள்ளனர்.