Home தொழில் நுட்பம் சிங்கப்பூரில் இரண்டாவது தகவல் மையம் அமைக்கிறது கூகுள்!

சிங்கப்பூரில் இரண்டாவது தகவல் மையம் அமைக்கிறது கூகுள்!

446
0
SHARE
Ad

google-second-data-centreசிங்கப்பூர், ஜூன் 5 – கூகுள் நிறுவனம் சிங்கப்பூரில்  சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவில் இரண்டாவது தகவல் மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஜூராங்கின் மேற்குப் பகுதியில் முதல் தகவல் மையம் அமைந்துள்ள நிலையில் அதைவிட அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இரண்டாவது மையம் உருவாக இருக்கிறது.

இது தொடர்பாக ஆசியா-பசிபிக் நாடுகளின் கூகுள் தகவல் மையங்களுக்கான  துணைத் தலைவர் ஜோ கவா கூறுகையில், “ஜூராங்கின் மேற்குப் பகுதியில் உருவாக இருக்கும் புதிய தகவல் மையம், ஏற்கனவே கட்டப்பட்ட தகவல் மையத்தை ஒத்து இருக்கும். ஆசியாவின் சுற்றுப்புறச்  சூழலை கருத்தில் கொண்டு அந்த கட்டிடம் உருவாக்கப்பட்டதால், இன்று சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று புதிய தகவல் மையமும் உருவாக்கப்படும்.”

“வரும் 2017-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து செயல்பட இருக்கும் இந்த தகவல் மையத்திற்கு தேவையான தொழில்நுட்ப ஊழியர்கள், தகவல் மைய மேலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிகவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அடுத்த சில மாதங்களில் தேர்வு செய்யப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ஜூராங்கின் மேற்குப் பகுதியில் சுமார் 2.45 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள முதல் தகவல் மையம், 120 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. இந்நிலையில் புதிய மையம் 500 மில்லியன் டாலர்களில் கட்டப்படுவதால், ஆசிய அளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒன்றாக அமைய வாய்ப்புள்ளது.