Home நாடு 1எம்டிபி விவகாரம் குறித்த நஜிப்பின் கலந்துரையாடல் ரத்து – காலிட் தகவல்

1எம்டிபி விவகாரம் குறித்த நஜிப்பின் கலந்துரையாடல் ரத்து – காலிட் தகவல்

597
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், ஜூன் 5 – 1எம்டிபி விவகாரம் குறித்து அரசு சாரா இயக்கங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இன்று காலை 8.50 மணியளவில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தனது டிவிட்டரில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் தலைநகரிலுள்ள புத்ரா அனைத்துலக வர்த்தக மையக் கட்டிடத்தில் நடப்பதாக இருந்தது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்ட நிலையில், நிகழ்ச்சி நடக்குமா என்பது தற்போது வரை கேள்விக் குறியாக உள்ளது.

காரணம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.