Home கலை உலகம் தாய்மையின் புனிதம் சொன்ன தெலுங்குப் படம்: லைஃப் இஸ் பியூட்டிபுஃல்

தாய்மையின் புனிதம் சொன்ன தெலுங்குப் படம்: லைஃப் இஸ் பியூட்டிபுஃல்

680
0
SHARE
Ad

life-is-beautiful-1

ஆந்திரா,ஜூன் 5- நீண்ட இடைவெளிக்குப் பின் அமலா நடித்திருக்கும் இந்தப் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தாய்மையின் பெருமையைச் சொல்லும் ஓர் அற்புதக் காவியமாக இது போற்றப்படுகிறது.

ஒரு தாய் தன் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தையும் அக்கறையையும் இப்படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. அதேபோல்,பிள்ளைகள் தமது தாயின் மீது  கொண்டிருக்கும் அன்பையும் மதிப்பையும் உருக்கமாகச் சொல்கிறது.

#TamilSchoolmychoice

தாய் தனக்கு இருக்கும்  புற்று நோயின் அபாயத்தைத் தன் குழந்தைகள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களைத் தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள்.தனக்குப் பின் தன் மூத்த மகன், தன் இரண்டு பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது.

life-is-beautiful-telugu-movie-pictures-056

தாத்தா வீட்டிற்கு வந்த மூத்த மகன் சீனு, புதிதாகக் கிடைத்த நண்பர்களால் வாழ்க்கையை வண்ணமயமாக உணர்கிறான். உடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நல்ல வாழ்க்கைக்கான ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்கிறான்.

இந்நிலையில் மூத்த தங்கைக்கு ஏற்படும் பிரச்சனை அவனைத் தாயைத் தேடி ஓட வைக்கிறது.

அங்கே போன பிறகு தான் தன்னை ஆறுதல் படுத்தும் நிலையில் தாய் இல்லை என்கிற கசப்பான உண்மை அவனுக்குத் தெரிய வருகிறது. நொறுங்கிப் போகிறான்.

தாயின் கனவுகள் அவனுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, அந்த வயதிற்குரிய அத்தனை குறும்புகளையும் அப்போதே தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் இலக்குகளை நோக்கிப் பயணப்படுகிறான்.

உச்சகட்டக் காட்சியில் அவனது தங்கை தனது பள்ளியில் பேசும் போது “நீ இருந்தால் தானேம்மா என் வாழ்வில் வெளிச்சம்”என்று கண்ணீருடன் சொல்வாள். அப்போது அவன் கண் கலங்கி அழுவான். அந்த   நொடியில் உதிரும் அவனது கண்ணீர்த் துளிகள்,  தாய்மைக்கு அவன் செலுத்தும் கோடானு கோடி நன்றிகளாகப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.